திராவிட முன்னேற்ற கழகத்தில் நீண்ட காலம் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர். தந்தை பெரியாரின் தொண்டன் , அறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி, கலைஞரின் கொள்கை தளபதி, தமிழக முதல்வர் மு.கஸ்டாலினின் வழிகாட்டி என்று போற்றப்படும் இனமான பேராசியர் அன்பழகனின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில், பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

