- Advertisement -

கள்ளக்குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து அரசு பேருந்து டயர்களின் காற்று பிடுங்கப்பட்டது – பயணிகள் அவதி, பரப்பரப்பு!

- Advertisement -

கள்ளக்குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து அரசு பேருந்து டயர்களின் காற்று பிடுங்கப்பட்டது – பயணிகள் அவதி, பரப்பரப்பு!

 

​திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுகவினர் நடத்திய போராட்டத்தின் போது அரசு பேருந்துகளின் டயர்களில் இருந்து காற்று இறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

​தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vagai

​இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டு சாலையில் சென்ற அரசுப் பேருந்துகளை மறித்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக,

Bismi

சாலையில் இயங்கிக் கொண்டிருந்த அரசு பேருந்துகளின் டயர்களில் இருந்து காற்றை வெளியேற்றியதால், பேருந்துகள் மேற்கொண்டு நகர முடியாமல் அங்கேயே நின்றன.

​திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், டயர் காற்று வெளியேற்றப்பட்டதாலும் பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியிலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

​இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றமான சூழலையும் உருவாக்கியுள்ளது.

 

#UdhayanidhiStalinProtest #Kallakurichi #UdhayanidhiStalinArrest #TNBusProtest #DMKProtest #TamilNaduNews #TNPoliitcs #BreakingNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்