உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் பஸ் மறியல் – ஒன்றிய செயலாளர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் கைது!
உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் பஸ் மறியல் – ஒன்றிய செயலாளர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் கைது!
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற சாலை மற்றும் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டப் பேச்சைத் தொடர்ந்து, சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் திமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


தன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆறு.சிதம்பரம் மற்றும் ஆர்.கணேசன் ஆகியோர் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் மற்றும் நிர்வாகிகள், சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் தீவிர கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் போராட்டத்தைக் கைவிட மறுத்து பேருந்துகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ஒன்றிய செயலாளர்கள் ஆறு.சிதம்பரம், ஆர்.கணேசன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இச்சம்பவத்தால் திருமயம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரப்பரப்பும் பதற்றமும் நிலவியது.
#UdhayanidhiStalin #UdhayanidhiArrest #Thirumayam #DMKProtest #Pudukkottai #TNPolitics #BusBlockade #BreakingNews





Comments are closed.