தஞ்சாவூர் ஆர்ப்பாட்டப் பேச்சு: உதயநிதி ஸ்டாலின் கைது – தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வருக்கு எதிராக ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் திமுக சார்பில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணைபோகும் தமிழக அரசைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வருக்கு எதிராகவும், பாலியல் ரீதியிலான ஆபாசக் கருத்துக்களையும் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட தவெக மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையப் போலீஸார் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பதிவு செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள்:
உதயநிதி ஸ்டாலின் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் சிறப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:
சட்டப்பிரிவு 196: பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்துதல்
சட்டப்பிரிவு 192: கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுதல்

சட்டப்பிரிவு 352: அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில் அவமதித்தல்
சட்டப்பிரிவு 79: பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவித்தல்
சட்டப்பிரிவு 296(பி): பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல்
சட்டப்பிரிவு 61 & 351(2): சதித்திட்டம் மற்றும் மிரட்டல் விடுப்பது தொடர்பான பிரிவுகள்
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் (பிரிவு 4)
தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act – பிரிவு 67): இணைய வழியில் பாலியல் சார்ந்த ஆபாசக் கருத்துகளை பரப்புதல்
வழக்குப் பதிவைத் தொடர்ந்து, சென்னையில் இருந்த உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இக்கைது நடவடிக்கையை அடுத்து தமிழக அரசியல் களத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தவெக மகளிர் அணியினர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதேவேளையில், இக்கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் வீதிக்கு வந்து தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
#UdhayanidhiStalin #DMK #TamilNaduPolitics #TNPolice #Thanjavur #TVK #PoliticalNews #BreakigNews





Comments are closed.