திருச்சி புங்கனூரில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ பழனியாண்டி!

0

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் – மாணவ, மாணவிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. சோம்பரசம் பேட்டை, அல்லித்துறை, சரவணபுரம், சாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புங்கனூர் செல்ல வேண்டிய பள்ளிக்கு சில ஆண்டுகளாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியிடம் புதிய பேருந்து சேவை செய்து தரக்கோரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

Bismi


இந்நிலையில் அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில் ஶ்ரீரங்கம் – புங்கனூர், மத்திய பேருந்து நிலையம் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இன்று கொடியசைத்து, அவரே பேருந்தை இயக்கி தொடங்கி வைத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்