2026ஆம் ஆண்டு தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையிலான ஒரு யுத்தம்-திருமாவளவன்
2026ஆம் ஆண்டு தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையிலான ஒரு யுத்தம்-திருமாவளவன்
போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும்,தமிழகத்தில் சாதி, மத சண்டை கூடாது என்பதை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் நல்லாட்சி 2026 ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,திருச்சியில் இன்று (2-ந்தேதி) சமத்துவ நடைபயணத்தை தொடங்குகிறார். இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை நான் 80களில் இருந்து தொடக்கத்திலேயே மாணவப் பருவத்திலேயே கண்டவன் அவரை கண்டு உயர்ந்தவன் அவர் எங்கே உரையாற்றினாலும் அங்கே சென்று அவருடைய உரைகளை கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.முத்தமிழறிஞர் கலைஞரின் போர்படை தளபதியாக களத்தில் அப்போது களமாடியவர்.அன்று கண்ட அதே வேகம் அதே வீரியம் பல பத்தாண்டுகளை கடந்த நிலையிலும் இன்றும் நீடிக்கிறது என்பது பெரும் வியப்பை தருகிறது.அது மட்டுமில்லாமல் ஏற்றுக்கொண்ட கொள்கையில் பகுத்தறிவு தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த சமத்துவ கொள்கையின் இன்னும் உறுதிப்பாட்டோடு விளங்குகிறார் என்பதற்கு சான்றாக இந்த சமத்துவ நடை பயணம் விளங்குகிறது அவருடைய கொள்கை உறுதிப்பாட்டில் ஒரு சான்றாக இது அமைந்திருக்கிறது.ஒருபுறம் சனாதன சக்திகள் இன்னொரு புறம் ஜனநாயக சக்திகள் தான் இன்றைக்கு அண்ணன் தளபதியின் தலைமையில் ஒருங்கிணைந்திருக்கிறோம்.சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சமத்துவம் என்பதுதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் நாம் பேசுகிற அரசியல் அந்த அரசியலுக்கு இன்றைக்கு தலைமையில் இருக்கக்கூடிய ஆற்றல் பெற்ற ஒரு தலைவரா ஸ்டாலின் இருக்கிறார். திராவிடம் என்று பேசக்கூடியவர்கள் சிலரும் தமிழ் தேசியத்தை பேசக்கூடியவர்களாக சிலர் முகமூடிகளை இணைந்து கொண்டு நமக்கு எதிரான பிரிவு அரசியலைப் பேசிக் பேசிக் கொண்டிருக்கிறார்.

பெரியார், அண்ணா, கலைஞர், சமத்துவத்திற்காக போராடினார்கள் அந்த வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கிற தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையிலான ஒரு யுத்தம் என பேசினார்.





Comments are closed.