- Advertisement -

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையை அபகரிக்க சதியா? ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை!

- Advertisement -

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையை அபகரிக்க சதியா? ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை!

 

​மதுரை | ஆகஸ்ட் 14, 2026:

 

தென் தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்க முயல்வதாகக் கூறி, புதுச்சேரி எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

 

Vagai

​தென் தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த செலவில் உயர்தர மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், டாக்டர் என். சேதுராமன் அவர்களால் 1000 படுக்கை வசதிகளுடன் ‘மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்கப்பட்டது. அவரது மகன் டாக்டர் எஸ். குருசங்கர் அவர்களின் நிர்வாகத்தில், கடந்த 36 ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்று, நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு இந்த மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறது.

​அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு:

​இந்நிலையில், இம்மருத்துவமனையை அபகரிக்கும் நோக்குடன் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகனும், புதுச்சேரி எம்.எல்.ஏ-வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவதூறு பரப்பி வருவதாக கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. ‘SS NEWS DIGITAL’ என்ற செய்தி சேனல் வாயிலாக, மருத்துவமனை மற்றும் அதன் நிர்வாகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு மாறான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bismi

​மருத்துவமனை நிர்வாகம் குறித்து பரப்பப்பட்ட அவதூறு செய்திகளை ‘SS NEWS DIGITAL’ உடனடியாக நீக்க வேண்டும்.

​உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

​மன்னிப்பு கோராத பட்சத்தில், நாடு முழுவதும் சமுதாய மக்களின் ஆதரவுடன் சட்டரீதியான கடுமையான முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும்.

​தவறான தகவல்களை அரசுக்கு கொண்டு சென்று குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

#MaduraiNews #MeenakshiMission #PressMeet #BreakingNewsTamil #TamilNaduNews #ThevarSamuthayam #JoseCharlesMartin #HospitalUpdate #Madurai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்