மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி! திருச்சி மாணவி ஜாயல் தெபொராள் தங்கப் பதக்கம் வென்று சாதனை!
மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி! திருச்சி மாணவி ஜாயல் தெபொராள் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

திருச்சி:

இந்தியப் பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) மற்றும் தமிழக அரசு சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 14, 17 மற்றும் 19 ஆகிய வயதுப் பிரிவுகளின் கீழ் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இப்போட்டியில், 14 வயதுக்குட்பட்டோருக்கான துப்பாக்கி சுடுதல் பிரிவில், திருச்சி பொன்மலை நார்த்-டி பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு (VIII-A) மாணவி ஜாயல் தெபொராள் . ஜா (வயது 13) பங்கேற்றார்.

‘பார்ன் ஷூட்டர்ஸ் அகாடமி’ (Born Shooters Academy) சார்பில் களமிறங்கிய இவர், தனது அபார திறமையை வெளிப்படுத்தி மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இவர் ஏற்கனவே கடந்த 2025-ஆம் ஆண்டும் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள மாணவி ஜாயல் தெபொராள் . ஜா அடுத்ததாக தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மத்தியப் பிரதேசம் இந்தூரில் வரும் அக்டோபர் 18 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தின் சார்பில் இவர் கலந்து கொள்ள உள்ளார்.
மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கும், திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி ஜாயல் தெபொராள் . ஜா பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
#Tiruchirappalli #TrichyNews #ShootingChampion #SGFI #TamilNaduSports #GoldenGirl #BornShootersAcademy #CSISchool #StudentAchievement #NationalShootingChampionship #Indore2026 #SportsNewsTamil





Comments are closed.