- Advertisement -

வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது; ரீல்ஸ் சுற்றும் ஆட்சியை மக்கள் கவனிக்கிறார்கள்: தம்பி விஜய்க்கு மு.க. ஸ்டாலின் காட்டமான பதிலடி!

- Advertisement -

வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது; ரீல்ஸ் சுற்றும் ஆட்சியை மக்கள் கவனிக்கிறார்கள்: தம்பி விஜய்க்கு மு.க. ஸ்டாலின் காட்டமான பதிலடி!

 

​சட்டமன்றத்தில் அண்மையில் நடந்த விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து அவர் முன்வைத்துள்ள முக்கிய கருத்துக்கள்:

 

​மறைக்க முடியாத மிசா தியாக வரலாறு

 

Vagai

​நெருக்கடி நிலை காலத்தில் (1976) மெரினாவில் கலைஞர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்தே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

 

​அடுத்த நாளே கைதாகி சிறை சென்றபோது, தொழுநோயாளிகள் அடைக்கப்படும் சிறிய அறையில் அடைக்கப்பட்டு, பூட்ஸ் கால்களாலும் லத்திகளாலும் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானோம்.

 

​அந்தத் தாக்குதலில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு உயிர்த்தியாகம் செய்தார்; என் தாடை எலும்பு உடைக்கப்பட்டது. இன்றும் உடலில் உள்ள தழும்புகளே என் போராட்ட வரலாற்றின் சாட்சி. சட்டமன்ற நூலக ஆவணங்களைப் படித்தாலே உண்மை புரியும்.

 

​அவதூறுகளும் சர்க்காரியா கமிஷனும்

​பலமுறை ஒன்றிய, மாநில ஆட்சிகள் மாறியும் கலைஞர் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் நிரூபிக்கப்படவில்லை.

 

​95% வழக்குகளில் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத அமலாக்கத்துறையின் அரசியல் பழிவாங்கும் கடிதங்களை வைத்துப் பேசுவது அறியாமை. ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினர் மீதே அமலாக்கத்துறை வழக்குகள் இருப்பது முதல்வருக்குத் தெரியாதா?

 

Bismi

​சட்டமன்ற மாண்பும் முதல்வருக்கான கண்ணியமும்

 

​முதல்வரானதும் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த விஜய், தற்போது அந்த கண்ணியத்தை மறந்து செயல்படுகிறார்.

 

​மக்களின் முன்மாதிரியாகத் திகழ வேண்டிய முதலமைச்சரின் வார்த்தைகளும் உடல்மொழியும் பொறுப்புடன் இருக்க வேண்டும்; சட்டமன்றம் ரீல்ஸ் எடுக்கும் இடமல்ல.

 

​மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று?

 

​திட்ட முடக்கம்: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது இந்த அரசு.

 

​சொன்னதும் செய்ததும்: விவசாயக் கடன் தள்ளுபடி முறையாக நடக்கவில்லை; ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என்ற வாக்குறுதி 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது; மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு இன்னும் ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுகிறது.

 

​சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து ஆட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது.

 

​உடன்பிறப்புகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

ஆட்சி அதிகாரம் கைமாறியதால் மக்கள் பிரச்சினைகளில் திமுக ஒதுங்கி நிற்காது. நாணயத்தின் மறுபக்கம் போல மக்கள் பணியைத் தொடர்வோம். உரிமைகளுக்காகத் தாத்தா, அப்பா காலத்திலிருந்து போராடி வரும் திமுக, மக்களின் நலனுக்காக இப்போதும் எப்போதும் சமரசமின்றித் தொடர்ந்து களத்தில் நிற்கும்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்