திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு பலாப்பழம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் திருமண மஹாலில் ரவீனா – பேவாஸ் தம்பதியினரின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் செஞ்சி பகுதியை சேர்ந்த உறவினரான வழக்கறிஞர் கதிரவன் காரில் பலாப்பழத்துடன் வருகை தந்து பலாப்பழத்தை கையில் தூக்கி சென்று மணமக்களுக்கு பலாப்பழம் வழங்கி ஓட்டு சேகரித்தார்.

 

 

Bismi

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

நான் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்றும், மணமக்களிடம் ஓபிஎஸ்க்கு பலாப்பழ சின்னத்தில் வாக்களிக்க கேட்டுகொண்டு அன்பளிப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிடும் நிலையில் திருமண மண்டபத்தில் உறவினர் ஒருவர் திடீரென்று பலாப்பழத்தை மணமக்களுக்கு பரிசாக வழங்கிய சம்பவம் உறவினர்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்