- Advertisement -

கோயில்களில் விஐபி கலாச்சாரத்திற்கும் ஊழலுக்கும் முற்றுப்புள்ளி? அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘மாஸ்டர் பிளான்’!

- Advertisement -

​கோயில்களில் விஐபி கலாச்சாரத்திற்கும் ஊழலுக்கும் முற்றுப்புள்ளி? அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘மாஸ்டர் பிளான்’!

​தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சாமானிய மக்கள் எவ்வித சிரமமுமின்றி மனநிம்மதியோடு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புவதற்கும் பல்வேறு அதிரடி முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

​செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோயில்களில் கொண்டு வரப்பட உள்ள புதிய ஆன்லைன் டோக்கன் முறை, முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

Vagai

​1. ஆன்லைன் டோக்கன் முறையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்கள்!

​தற்போது அறநிலையத்துறை இணையதளத்தில் உள்ள தரிசன டோக்கன் பதிவு செய்யும் முறை முழுமையாக பயன்பாட்டில் இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், அதனை தற்போதைய காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைக்க உள்ளதாகக் கூறினார்.

​சிறப்பு முன்னுரிமை டோக்கன்கள்: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், 6 மாதக் குழந்தையுடன் வரும் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பாதுகாப்பாகவும், எளிதாகவும் தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பு ஆன்லைன் டோக்கன் வசதி சேர்க்கப்பட உள்ளது.

​கூட்ட நெரிசல் மேலாண்மை (Crowd Management): திருப்பதி, சபரிமலை போல அல்லாமல் தமிழகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலின் கொள்ளளவை (Capacity) ஆராய்ந்து, ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் தான் தரிசனம் செய்ய முடியும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இதன் மூலம் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி போன்ற கோயில்களில் வார இறுதி நாட்களில் ஏற்படும் திடீர் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.

​அடித்தட்டு மக்களுக்கான கவுண்டர்கள்: ஆன்லைன் வசதி தெரியாத அடித்தட்டு மற்றும் ஏழை எளிய மக்களுக்காக, கோயில்களிலேயே நேரடியாக டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் அமைக்கப்படும். உள்ளூர் மக்களுக்கான சிறப்பு தரிசன வசதிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

​போலி டோக்கன் மற்றும் ஊழல் ஒழிப்பு: வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவே எளிதாக டோக்கன் பெறும் வசதியும் பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் பல்காக டிக்கெட் புக் செய்வது தடுக்கப்படும். முதற்கட்டமாக சில பெரிய கோயில்களில் இது சோதனை முறையில் (Trial & Error) அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு வரப்படும்.

Bismi

​2. முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் மீது 360 டிகிரி விசாரணை!

​”கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் கோயில்களில் ஆன்மீக நோக்கத்தை விட கமர்சியல் விஷயங்களே அதிகம் நடந்துள்ளன. உண்டியல் காணிக்கை, தங்கத்தை உருக்கி டெபாசிட் செய்தது, அன்னதானத் திட்டம் மற்றும் கோயில் கட்டுமானப் பணிகள் என பலவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. இது குறித்து 360 டிகிரி கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் எச்சரித்தார்.

​3. சர்ப்ரைஸ் இன்ஸ்பெக்ஷன் (திடீர் ஆய்வுகள்) தொடரும்!

​கோயில்களில் தொடர்ந்து திடீர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று உறுதியளித்த அமைச்சர், “யார் தவறு செய்திருந்தாலும் சாதி, மத, பண, பாலின பாகுபாடு பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவினர் சாதி அரசியல் செய்கிறார்கள். தந்தை பெரியாரைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள், இன்று சாதிப் பெயரைச் சொல்லி பேசும் அளவிற்கு கொள்கையிலிருந்து நீர்த்துப் போய்விட்டார்கள்” என்று சாடினார்.

​4. அரசியல் கேள்விகளுக்குப் பதிலடி!

​திருப்பரங்குன்றம் விவகாரம்: “அறநிலையத்துறை அமைச்சராக எனது அட்மினிஸ்ட்ரேஷன் பணிகளை நான் சரியாகச் செய்து வருகிறேன். இந்த விவகாரத்தில் மாண்புமிகு முதல்வர் எடுக்கும் முடிவை கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.”

​டிவிகே (TVK) கொள்கை மற்றும் விவேகம்: “மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்கள் எங்களின் கொள்கை, கோட்பாடு மற்றும் விஷனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தலைவர் தளபதி அவர்கள் தவறுகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் தூய்மையான கொள்கைகளை முன்னிறுத்தி நாங்கள் பயணிப்பதால் தான் மக்கள் எங்களை ஆட்சிப் பீடத்தில் அமர வைத்துள்ளனர்.”

​முன்னாள் முதல்வரின் விமர்சனம்: ‘இந்த ஆட்சி 3 மாதங்கள் கூட தாங்காது’ என்ற எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு, “அவர்கள் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று தான் சொன்னார்கள், நடந்ததா? அதனால் அதைப் பற்றி கவலையில்லை, மக்கள் பணியே முக்கியம்” என்று பதிலடி கொடுத்தார்.

​மேலும், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் யானைகள் புத்துணர்ச்சி முகாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விரைவில் நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

​#TamilNadu #HRNC #MinisterRamesh #TempleDevelopment #OnlineDarshan #CrowdManagement #TVK #TamilNaduGovernment #TempleReforms #BreakingNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்