திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா கோலாகலம்!
திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா கோலாகலம்!
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


இவ்விழாவிற்கு கல்லூரியின் (மு.கூ.பொ) முதல்வர் முனைவர். சி. மோகனசுந்தரம் தலைமை தாங்கினார்.
திருச்சி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர். க. ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
அவர் தனது உரையில், பட்டதாரி மாணவர்கள் தங்களின் உயர்கல்வி அறிவைக் கொண்டு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார்.
இவ்விழாவில் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.





Comments are closed.