கே. செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயாவில் கல்வி வளர்ச்சி நாள் விழா: மாணவர்களுடன் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்!
கே. செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயாவில் கல்வி வளர்ச்சி நாள் விழா: மாணவர்களுடன் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்!
திருப்பூர்:

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை முன்னிட்டு, கே. செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அங்குள்ள மாணவ, மாணவியருடன் கலந்துரையாடி உரையாற்றியது தமக்குக் கிடைத்த பெரும் பெருமை என்று அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
காமராஜரின் கல்விப் புரட்சி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
”கர்மவீரர் காமராஜர் அவர்கள் விதைத்த கல்விப் புரட்சியின் விதைகள் இன்றும் ஒவ்வொரு மாணவரின் கனவுகளிலும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைய விழாவில் தம்பிகளுடனும், தங்கைகளுடனும் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகத்திற்குப் பாராட்டு
அறிவும், ஒழுக்கமும், சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்குவதில் கே. செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் ஆற்றி வரும் மேலான பணிகளுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் திரு. அண்ணாமலை அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
உயர்ந்த இலக்குகளை எட்ட வாழ்த்து
மாணவ, மாணவியர் அனைவரின் கல்விப் பயணம், மிக உயர்ந்த இலக்குகளை எட்ட வேண்டும் என்றும், வரும் காலத்தில் நம் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் சிறந்த குடிமக்களாக அவர்கள் திகழ வேண்டும் என்றும் கூறி, ஒட்டுமொத்த மாணவச் செல்வங்களுக்கும் தனது அன்பான நல்வாழ்த்துக்களை அவர் பகிர்ந்துள்ளர்
#Annamalai #KamarajarBirthday #KalviValarchiNaal #VivekanandaVidyalaya #Tiruppur





Comments are closed.