புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து கீரமங்கலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து கீரமங்கலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரின் கைதைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தெற்கு மாவட்டத் தலைவரும் திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான ராமசுப்புராம், காங்கிரஸ் கலைப் பிரிவு தெற்கு மாவட்டத் தலைவர் மயில்வாகனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

#Keeramangalam #Pudukkottai #CongressProtest #ModiGovt #RahulGandhi #PriyankaGandhi #TNCongress #PudukkottaiNews

Comments are closed.