திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம்!

0

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீமநகர் பகுதியில் வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக பீமநகர் செடல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்கிருந்து பீமநகர் பஸ் ஸ்டாப், தெற்கு யாதவ தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, அந்தோனியார் கோவில் தெரு, சையது முஸ்தபா சாலை, மேலப்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Bismi

 

இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, முன்னாள் எம்பி ரத்தினவேல், ப.குமார், முன்னாள் அரசு கொறடா மனோகரன், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்