- Advertisement -

அரசியல் காழ்ப்புணர்ச்சியா? உண்மை சம்பவமா? – முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்த சர்ச்சை; தேசிய முற்போக்கு கழக நிறுவனர் வழக்கறிஞர் இரஞ்சித் கருத்து!

Bismi

அரசியல் காழ்ப்புணர்ச்சியா? உண்மை சம்பவமா? – முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்த சர்ச்சை; தேசிய முற்போக்கு கழக நிறுவனர் வழக்கறிஞர் இரஞ்சித் கருத்து!

 

தனியார்

பள்ளிகளுக்கான உரிமம் மற்றும் அனுமதி/அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ. 100 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vagai

இக்கைது நடவடிக்கையானது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்கொள்ளப்பட்டது என திமுக தரப்பில் தொடர்ந்து வாதிடப்பட்டு வரும் நிலையில், தேசிய முற்போக்கு கழகத்தின் நிறுவனர் வழக்கறிஞர் இரஞ்சித் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

 

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

- Advertisement -

திருச்சி திருவெறும்பூர் எழில் நகரை சேர்ந்த திமுக இளைஞரணி பொறுப்பாளர் ஒருவர், “நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் அண்ணி (முன்னாள் அமைச்சரின் மனைவி) அவர்களே முழு காரணம். அண்ணன் வெளிநாட்டிற்கு செல்லும் போதெல்லாம், அண்ணியார் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டார். அண்ணனின் தற்போதைய நிலைக்கு முழு முதற்காரணமும் அண்ணியார் மட்டுமே” என்று பகிரங்கமாக போது வெளியில் பேசியுள்ளார். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மூலம் பல்வேறு நன்மைகளையும் பயன்களையும் அடைந்த நபர்களே, இன்று அவர்களை பொதுவெளியில் விட்டுக் கொடுத்து தவறாக பேசுவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

திருவெறும்பூர் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை செய்து மக்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த முன்னாள் அமைச்சரின் தேர்தல் தோல்விக்கு காரணம், அவரை சுற்றி இருந்த இது போன்ற நபர்கள்தான் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

 

மேலும், திமுகவின் எதிர்காலம் சிறக்க வேண்டுமானால், தலைமை இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும்.

 

வார்டு உறுப்பினர் முதல் முதலமைச்சர் வரை, நமது வரிப்பணத்தை சரியான முறையில் கையாண்டு, வாழ்வியலை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களாக செயல்படுத்தக்கூடிய நிர்வாகத் திறன் கொண்டவர்களையே நாம் பதவியில் அமர்த்த வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் நமக்கான பணிகளை செய்யவில்லை எனில், அவர்களிடம் வேலை வாங்குவதற்கான அரசியல் புரிதலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக, வேலை நடக்கவில்லை என்பதற்காக நாமாக முன்வந்து லஞ்சம் கொடுப்பதும் குற்றமே ஆகும். குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்கிற வாதமும் தவறானது. குற்றவாளிகளும் தப்பிக்கக் கூடாது, அதே வேளையில் நிரபராதிகளும் தண்டிக்கப்படக் கூடாது. எதுவாயினும் சட்டம் தன் கடமையை சரியாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்