துறையூரில் வேட்பாளரின் பெயரை மறந்து கே.என்.நேருவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கமலஹாசன்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திருச்சி துறையூர் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது துறையூர் பாலக்கரை பகுதியில் அவர் பேசும் பொழுது, தனக்காக ஓட்டு கேட்க வரவில்லை எனவும் தம்பி கே.என்.நேருவுக்கு வாக்கு சேகரிக்க வந்தேன் எனவும் பேசினார். வேட்பாளர் பெயரை குறிப்பிடாமல் வேட்பாளர் தந்தையின் பெயரை குறிப்பிட்டு வாக்கு சேகரித்தார். இதனால் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் வேட்பாளரின் பெயரை பலமுறை எடுத்துக் கூறிய பிறகு சமாளித்துக் கொண்டு வேட்பாளரின் பெயருக்கு ஆதரவு திரட்டினார்.

