நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சமூக சேவகர் பத்மஶ்ரீ தாமோதரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கேஸ் ஸ்டவ் சின்னத்தில் போட்டியிடும் இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


அந்த வகையில் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஜாபேட்டை, எடத்தெரு, தர்மநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று பொது மக்களை நேரில் சந்தித்து கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளர் தாமோதரனுக்கு அப்பகுதி பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.




பிரச்சாரத்தின் போது வேட்பாளர் தாமோதரன் பேசுகையில்…
40 வருட காலம் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள நான் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றால், நமது மக்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த தொகுதியின் மேம்பாட்டிற்காக வேலை செய்வேன். நாட்டிலேயே முதன்மையான தொகுதியாக திருச்சியை மாற்றிக்காட்டுவேன். ஆகையால் பொது மக்களாகிய நீங்கள் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளரின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் பலர் உடன் இருந்தனர்.

