- Advertisement -

பெரம்பலூர் தொகுதியில் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வித்திட்டம் தொடரும் – 1,500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை SRM மருத்துவமனையில் வழங்கப்படும் – மண்ணச்சநல்லூர் பகுதியில் பிரச்சாரத்தின் போது பாரிவேந்தர் வாக்குறுதி!

0

- Advertisement -

தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளு தாளப்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம் பூனாம்பாளையம் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய பாரிவேந்தர், பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளார். பெரம்பலூர் MP தொகுதியில் ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் தொடரும், மேலும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை SRM மருத்துவமனையில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தத்தமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Vagai

அதனைத் தொடர்ந்து தளு தாளப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தாமரை சின்னத்தை தவிர வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லை என தெரிவித்தார்.

Bismi

அதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்களை சிந்திக்க விடாமல், மனதை மாற்றி குடிக்க வைப்பதாகவும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கீழப்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தர், கீழப்பட்டி கிராம மக்களின் கோரிக்கையான சமுதாய கூடம் கட்டி கொடுக்கப்படும் எனவும், சூரியன் சுட்டெரித்து மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் அழகிய மணவாளம், கோபுரப் பட்டி, சோழங்க நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக எம்.பிகள் நாடாளுமன்றத்தை முடக்குவது, தடை செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாகவும், நல்லவர்களுக்கு வாக்களித்தால் தங்களுடைய தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து குருவம் பட்டி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய அவர், தன்னை தேர்ந்தெடுத்தால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படும் எனவும், மத்திய அரசின் நிதியை முழுமையாக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக சிறுகாம்பூர் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அபோது கடந்த 5 ஆண்டுகளில் திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதை மட்டுமே செய்து வந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் தான் 2019ஆம் ஆண்டு மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாகவும் பாரிவேந்தர் கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்