திருச்சி சிறப்பு காவல் படையில் சுதந்திர தின விழா, தியாகிகள் குடும்பத்தினருக்கு மரியாதை & நற்பணி சான்றிதழ்கள் வழங்கல்!
திருச்சி சிறப்பு காவல் படையில் சுதந்திர தின விழா, தியாகிகள் குடும்பத்தினருக்கு மரியாதை & நற்பணி சான்றிதழ்கள் வழங்கல்!
திருச்சி:
இந்திய சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, நூற்றாண்டு பாரம்பரியமிக்க திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

இவ்விழாவில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியின் தளவாய் திரு. த. கார்த்திகேயன், M.Com., அவர்கள் கலந்துகொண்டு மூவர்ண தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திரு. KR. வெள்ளைச்சாமி அவர்களின் குடும்பத்தினர் நேரில் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

1999 கார்கில் போரில் வீரமரணமடைந்து தாய்நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த மேஜர் M. சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான திரு. S. உத்தநாயனார் பிள்ளை மற்றும் திரு. T.V. அனந்த கிருஷ்ணன் ஆகியோரின் தியாகங்களை தளவாய் அவர்கள் தனது சிறப்புரையில் நினைவு கூர்ந்தார்.
சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள், காவலர்கள் (ஆளினர்கள்) மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு நற்பணி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், இவ்விழாவில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் கம்பீரமான அலங்காரக் கவாத்து (அணிவகுப்பு) மற்றும் காவல் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

#IndependenceDay #Tiruchirappalli #TamilNaduPolice #TSP1stBattalion #SaluteToHeroes #MajorSaravanan #FreedomFighters #TrichyNews #PoliceParade





Comments are closed.