- Advertisement -

திருச்சி தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் – வேட்புமனு தாக்கல் செய்த பின் அதிமுக வேட்பாளர் கருப்பையா பேட்டி!

0

- Advertisement -

பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, விஜயபாஸ்கர், முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.குமார், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Bismi

Vagai

இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கருப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில்….

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆசிர்வாதத்துடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக ப.குமார் MP ஆக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் திருச்சியில் செயல்படுத்தவில்லை. எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால், திருச்சி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் பிரதிபலிப்பேன் என்றார். திருச்சி தொகுதியை பொருத்தவரை சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை, மேம்பாலம் போக்குவரத்து மேம்படுத்தப்படவில்லை, இரு வழி சாலைகள், நான்கு வழி சாலைகள் திட்டத்தில் இந்தியாவிலேயே திருச்சி தொகுதி பின்தங்கி உள்ளது.
நான் திருச்சி தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவேரி-வைகையை இணைக்கும் குண்டாறு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். திருச்சி தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்