- Advertisement -

விஜய் நேற்று வரை தன்னுடைய தொழிலில் பிஸியாக இருந்துவிட்டு, இன்று கிறிஸ்தவர் என்ற அடையாளத்தோடு அரசியலுக்கு வருவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது – வரும் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு – கிறிஸ்தவ நல அமைப்பு மாநிலத் தலைவர் பேட்டி.

- Advertisement -

விஜய் நேற்று வரை தன்னுடைய தொழிலில் பிஸியாக இருந்துவிட்டு, இன்று கிறிஸ்தவர் என்ற அடையாளத்தோடு அரசியலுக்கு வருவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது – வரும் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு – கிறிஸ்தவ நல அமைப்பு மாநிலத் தலைவர் பேட்டி.

 

கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி குடமுருட்டி பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்தின ராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் AICC அமைப்பின் பேராயர் மோகன்தாஸ், செயலாளர் சாம் ஜெபதுரை மற்றும் திருச்சி, தஞ்சை, ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த பேராயர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 

Vagai

தொடர்ந்து கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்தின ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

 

Bismi

எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டறிந்து, அனைத்து மக்களுக்கும் நல்லாட்சி செய்து கொண்டிருக்கின்ற, திராவிட மடல் ஆட்சியின் நாயகர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிப்பது என்றும், 234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் களப்பணி ஆற்றுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

 

கிறிஸ்தவரான ஜோசப் விஜய் திருச்சியில் போட்டியிடுகிறார், அவருக்கு உங்கள் ஆதரவு எப்படி? என்ற கேள்விக்கு…

 

கிறிஸ்தவம் என்பது 200, 300 ஆண்டுகளாக இருந்து வருகிறது. நிறுவனங்கள் மிகவும் துடிப்பாக செயல்பட்டு வருகிறது. கிறிஸ்தவ நிறுவனங்களில் படித்தவர்கள் எல்லா கட்சிகளிலும் பொறுப்பு மிகுந்த பதவிகளில் இருந்து வருகின்றனர்.

கிறிஸ்துவ மக்களுக்கு பேசுபவர்களாக, எல்லாரையும் அரவணைத்து செல்பவர்களாக இருப்பவர்கள்தான் நாங்கள் ஆதரிக்க முடியும். விஜய் நேற்று வரை தன்னுடைய தொழிலில் பிஸியாக இருந்துவிட்டு, இன்று கிறிஸ்தவர் என்ற அடையாளத்தோடு அரசியலுக்கு வருகிறார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

 

பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். மதக் கலவரமாக மாற்ற முயற்சிக்கின்ற சக்திகளை ஒடுக்குகின்ற ஒரு ஆட்சியாகவும், அரசாகவும், கட்சியாகவும் திமுக உள்ளது. எனவே, எங்களது ஆதரவை தெரிவிக்கிறோம் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்