திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் ரூ.3000 வழங்கினார் -கே.ன்.நேரு
திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் ரூ.3000 வழங்கினார் –கே.ன்.நேரு

இந்தப் பொங்கல் மகிழ்ச்சி நிறைந்த பொங்கலாக கொண்டாடும் வகையில் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் ரூ. 3000 வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்து தமிழர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 924 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எனது திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு – பீமநகர் – பெரியமிளகு பாறை – எடைமலைப்பட்டி புதூர் – கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் ரூ.3000 வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோருடன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





Comments are closed.