- Advertisement -

கோவையில் உருவபொம்மை எரித்து போராட்டம்!

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.

- Advertisement -

கோவையில் உருவபொம்மை எரித்து போராட்டம்!

Bismi

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.

கோவையில் இன்று ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி வருகை தருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.பல முக்கிய கட்சி கூட்டணி விவகாரம் மற்றும் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேசுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உருவபொம்மையை எரித்துப்போராட்டம் நடத்தப்பட்டது. சில வாரங்களுக்கு முன் பீகார் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் நடந்தது நிலையில் அப்பிரசாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பேசினார்.அதுகுறித்து முற்போக்கு இயக்கத்தினர் தற்போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
உருவபொம்மையை எரித்தபடி சாலையில் ஓடியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கருப்பு கொடி போராட்டம் நடத்திய முற்போக்கு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்