நாய்களை கொன்று, உரிமையாளர்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் கைது – திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

நாய்களை கொன்று, உரிமையாளர்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் கைது – திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

திருச்சியில், நள்ளிரவில் வீட்டில் காவலுக்கு இருந்த நாய்களை விஷம் வைத்து கொன்று வீட்டின் உரிமையாளர்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் கைது.

கொள்ளை போன நகைகள் மீட்பு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், மணியங் குறிச்சியை சேர்ந்தவர் அமரஜோதி (வயது 50) இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது 46) இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அமரஜோதி விவசாயம் செய்து வருகிறார்.

 

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி இரவு 10 .45 மணிக்கு பிச்சையம்மாள் மற்றும் அவரது இரு குழந்தைகளும் வீட்டின் உள்ளேயும்,

அமரஜோதி வீட்டு திண்ணையிலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது முகமூடி, கையுறைகள் அணிந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்புறம் வழியாக நுழைந்து அமரஜோதியை அடித்து கட்டிப்போட்டுவிட்டு வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்று பிச்சையம்மாள் மற்றும் அவரது இரு குழந்தைகளை கட்டிப் போட்டு வீட்டிலிருந்த 9 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து பிச்சையம்மாள் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதேப்போன்று

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தளவாய்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ண கோனார் என்பவரது மகன் மகாலிங்கம்

Bismi

(வயது 74 ) இவரது மனைவி கமலவேணி

(வயது 65) இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூர் சென்றுவிடவே வயதான தம்பதிகளான இவர்கள் விவசாயம் பார்த்துக்கொண்டு அந்த வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இரவு 8.40 மணியளவில் வீட்டின் வராண்டாவில் இவர்கள் இருவரும் அமர்ந்திருந்த போது முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்புறம் வழியாக நுழைந்து தம்பதிகளை மிரட்டி கட்டிப்போட்டு கமலவேணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, தோடு மற்றும் மகாலிங்கம் பாக்கெட்டில் வைத்திருந்த 5000 ரொக்கத்தையும் கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

 

கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளை போன வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது.

தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்,புத்தாநத்தத்தைச் சேர்ந்த குட்டி என்ற சங்கப் பிள்ளை (வயது 23) தலைமையில் அவனது நண்பர்களான ஹரிஹரன், பாலமுருகன், ஸ்ரீராம், அரவிந்த், கரண்குமார்,

முகேஷ் குமார், சுபாஷ் சந்திர போஸ், தர்மராஜ், அழகேசன், நவநீதகிருஷ்ணன் ஆகிய 11 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கொள்ளை சம்பவத்திற்கு முன்பு அந்த வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் விஷம் கலந்த மாமிசத்தை நாய்களுக்கு கொடுத்து கொன்றுவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொள்ளையர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஆறு சவரன் தங்க நகைகள்,

கொள்ளைக்குப் பயன்படுத்தியஇருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளை சம்பவங்களால் தூக்கத்தை தொலைத்த மணப்பாறை வாழ் பொதுமக்கள், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்தின் அதிரடி நடவடிக்கையால் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்