யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்த நரிக்குறவரை நவல்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை
யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்த நரிக்குறவரை நவல்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனி சேர்ந்தவர் அர்ஜுன் நம்பியார் ( 35 ) இவர் அரசு அனுமதி இல்லாமல் நாட்டு கை துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜுன் நம்பியாரிடம் இருந்து நாட்டு கை துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு அவனையும் பிடித்து விசாரணை செய்தப்போது வேட்டையாடுவது எங்களது குல தொழில் என்றும் அதற்காக செல்போனில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாகும் கூறியுள்ளான். அதன் அடிப்படையில் தொடர்ந்து நவல்பட்டு போலீசார் அர்ஜுன் நம்பியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments are closed.