- Advertisement -

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு: 24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது!

- Advertisement -

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு: 24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள இனாம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரபல அய்யாளம்மன் கோவிலில், பூட்டை உடைத்து பித்தளை மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற நபரைச் சமயபுரம் காவல் நிலையப் போலீசார் 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Vagai

​இனாம் சமயபுரம் பகுதியில் உள்ள அய்யாளம்மன் கோவில் பூசாரியான சுரேஷ்குமார் (52), வழக்கம்போல் கோவிலைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் மாலை கோவிலைத் திறக்க வந்தபோது, கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் மண்டபத்தில் இருந்த 5 கிலோ எடையுள்ள பித்தளை விளக்குச் சரம் (15 விளக்குகள்), அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் வெள்ளித் தாலி சரடு மற்றும் கோவில் அலுவலக அறையில் இருந்த சிசிடிவி பதிவு சாதனம் (DVR) ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.

Bismi

​இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா கணேசன் மற்றும் பூசாரி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த சமயபுரம் காவல்துறையினர், கோவிலில் இருந்த மற்றொரு சிசிடிவி சாதனப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து பொருட்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

​அந்தப் பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், திருட்டில் ஈடுபட்ட லால்குடி அருகே புறத்தாக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த அருளானந்தம் (26) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 பெரிய பித்தளை குத்துவிளக்குகள், 2 பித்தளை சரவிளக்குகள் மற்றும் 1 பித்தளையிலான அம்மன் முகம் ஆகியவற்றைத் திரும்பப் பெற்றனர்.

​காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அருளானந்தம் மீது சமயபுரம், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமானது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார், அவரைத் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைப் பிடித்த காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

​#Trichy #InamSamayapuram #TempleTheft #SamayapuramPolice #CrimeNews #TrichyNews #Arrested

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்