- Advertisement -

அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு? திமுக MLA கதிரவன் மருத்துவமனை மீது பரபரப்பு புகார்!

- Advertisement -

​அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு? திமுக MLA கதிரவன் மருத்துவமனை மீது பரபரப்பு புகார்!

திருச்சி:

Vagai

மருத்துவமனையின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையால் பிறந்த குழந்தை உயிரிழந்ததாகவும், இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்றபோது திமுக எம்.எல்.ஏ கதிரவன் தனது குண்டர்களை வைத்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீருடன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

​பனிக்குடம் உடைந்தும் அலட்சியம்: பெற்றோரின் நெஞ்சையறுக்கும் குற்றச்சாட்டு

​திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது மனைவி சினேகா (25). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி பிரசவத்திற்காகச் சமயபுரம் பகுதியில் உள்ள மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கதிரவனுக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

​மறுநாளே (ஏப்ரல் 29) சினேகாவுக்குப் பனிக்குடம் உடைந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் குடும்பத்தினர் தொடர்ந்து முறையிட்டும், இரண்டு நாட்களாக எந்தவித முறையான சிகிச்சையும் அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

​பிறப்புறுப்பு வழியே செலுத்தப்பட்ட தண்ணீர்!

​மே 1-ஆம் தேதி பிரசவ வலி ஏற்படுவதற்கான ஊசி செலுத்தப்பட்ட நிலையில், சினேகா இரவு முழுவதும் கடுமையான வலியால் துடித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையை எடுக்குமாறு குடும்பத்தினர் கெஞ்சியுள்ளனர்.

​ஆனால், மே 2-ஆம் தேதி காலை குழந்தை தானாக வெளியே வரும் சூழல் ஏற்பட்ட போது, பனிக்குடத்தில் தண்ணீர் இல்லை எனக் கூறி, சினேகாவின் பிறப்புறுப்பு வழியாக மூன்று பாட்டில் தண்ணீரை மருத்துவர்கள் உள்ளே செலுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் சினேகா அதிர்ச்சி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

Bismi

​விவரங்களை மறைத்து அவசரக் கையெழுத்து:

​அன்றைய தினம் காலை 8.15 மணிக்குக் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையிடம் எந்தவொரு அசைவும் இல்லை. பிறந்தது என்ன குழந்தை என்ற விவரத்தைக் கூடக் கூறாமல் மறைத்த மருத்துவமனை நிர்வாகம், தந்தை விஜயிடம் அவசரமாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கையெழுத்து வாங்கியுள்ளது. பின்னர், மே 4-ஆம் தேதி குழந்தையின் நிலை மோசமாக இருப்பதாகக் கூறி, சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

​”இறந்த குழந்தையையாவது திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் எனப் போராடிய பிறகே, நீண்ட இழுபறிக்குப் பின் குழந்தை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.” – பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

​நியாயம் கேட்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்!

​குழந்தையை இழந்து வாடிய தம்பதியினர், கடந்த ஜூன் 9-ஆம் தேதி தனலட்சுமி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் சூர்யாவிடமும், நிர்வாகத்திடமும் நியாயம் கேட்டுள்ளனர். அப்போது, “நீங்கள் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள்” எனக்கூறி, 100-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை வைத்து அவர்களை மருத்துவமனையை விட்டு வெளியே தள்ளியுள்ளனர்.

​”ஓட்டு கேட்க மட்டும் கைகூப்பி வந்தாங்க..” – எம்.எல்.ஏ மீது தாய் சினேகா பகிரங்க புகார்:

​இதுகுறித்து இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த தாய் சினேகா கண்ணீருடன் பேசியதாவது:

​”மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் என் குழந்தை இறந்தது குறித்து மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கதிரவனை நேரில் சந்தித்துப் புகார் கூறினேன். அதற்கு அவர், ‘நீ என்னைக் கேட்டுக்கொண்டா இந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்தாய்?’ என இளக்காரமாகப் பேசினார்.

​தேர்தலின் போது கைகூப்பி ஓட்டு கேட்க வந்த எம்.எல்.ஏ கதிரவன், இப்போது அவருடைய குண்டர்களை வைத்து எங்களை மிரட்டுகிறார். 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் முன்னிலையில் எங்களைக் கேவலமாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். மேலும், ‘நீ எங்கே வேண்டுமானாலும் செல், உன்னால் முடிந்ததைப் பார், நான் எங்கே பார்க்க வேண்டுமோ அங்கே பார்த்துக் கொள்கிறேன்’ என எம்.எல்.ஏ கதிரவன் மிரட்டல் விடுத்தார்.”

​ஏற்கனவே கிட்னி முறைகேடு புகாரில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ கதிரவனின் மருத்துவமனையில், தற்போது சிகிச்சைக் குறைபாட்டால் குழந்தை உயிரிழந்த விவகாரமும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எம்.எல்.ஏ மிரட்டல் விடுத்த சம்பவமும் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் எம்.எல்.ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

#Trichy #DMKMLA #Kathiravan #MedicalNegligence #ChildDeath #DhanalakshmiSrinivasanHospital #TrichyNews #TamilNaduNews #JusticeForNewBorn

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்