ரஜினிகாந்த் படத்தில் இருந்து சுந்தர் சி திடீரென என விலக காரணம் என்ன? வந்து விழுந்த சரமாரியான கேள்விகள் – கமல்ஹாசன் பதில்.

ரஜினிகாந்த் படத்தில் இருந்து சுந்தர் சி திடீரென என விலக காரணம் என்ன? வந்து விழுந்த சரமாரியான கேள்விகள் – கமல்ஹாசன் பதில்.

ஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்குவதாக இருந்த சுந்தர் சி திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் சுந்தர் சி விலகுவதற்கு என்ன காரணம் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் பதில்:

Bismi

எனினும் இந்த படம் கைவிடப்படவில்லை. விரைவில் வேறொரு இயக்குநருடன் தொடரும் உறுதி தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிடிக்கும் வரை கதைகளை கேட்டுக்கொண்டே இருப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலக என்ன காரணம்?

மீண்டும் இணைய சான்ஸ் இருக்கா?

என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், அதற்கு தான் அவர் அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே.. அது தான் அவருடைய கருத்து.
அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்’ என்றார்.
புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் நிச்சயமாக வாய்ப்பு கொடுப்போம்.. கதை நல்லாக இருந்தால் போதும் என்று கூறினார். அப்போது, ரஜினியும் நீங்களும் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், அது இன்னொரு படத்தில் நடக்கும். அதற்கான கதையும் தேடிக்கொண்டு இருக்கிறோம். இப்போதைக்கு இந்த படம் முதலில் பண்ணுகிறோம்” என்றார்.
இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று பதில் அளித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்