விஜயை பார்த்து எங்களுக்கு பயம் இல்லை – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

மு. சுபைருதீன் - திருச்சி

திருச்சி சோமரசம்பேட்டையில் 30 லட்சம் மதிப்பீட்டில் சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

திருச்சி சோமரசம்பேட்டையில் 30 லட்சம் மதிப்பீட்டில் சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில்

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,…

 

Bismi

கரூர் சம்பவத்திற்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு?

 

அவர் வேறு என்ன சொல்ல முடியும், செய்ய முடியும், நேற்று முதலமைச்சர் கூறியதை கேட்டீர்களா? தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது, வெள்ளம் வந்தது அதற்கு கூட பணம் வழங்கவில்லை. அப்போது கூட வராத பாஜக எம்பிக்கள் குழு உடனடியாக இந்த நிகழ்வுக்கு வருவதற்கு காரணம் என்ன என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்?. அதுமட்டுமின்றி, பாஜக கூட்டணியில் அதிமுகவும் இருப்பதால் அது போன்றுதான் பேசுவார், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். நீதிமன்றத்தில் கூறியதுதான் உண்மை நிலைமை.

 

கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது. விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை என பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கூறுகிறது.

 

விஜய் கூட்டத்திற்கு அனுமதி வாங்கியவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றம் அக்கட்சி பற்றி கூறி இருக்கிற நிலையில் அவர்களை (விஜய்யை) பார்த்து நாங்கள் ஏன் பயப்படவேண்டும், பயந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? எதுவந்தாலும் நாங்கள் சந்திப்போம் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்