திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து!

0

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளைய தினம் (ஜூலை 10) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….

Bismi

கம்பரசம் பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம், அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையங்களிலிருந்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் ஜூலை 10 ஆம் தேதி இருக்காது. எனவே, அன்றைய தினம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 11 ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்