திருச்சியில் வேட்டையன் ரிலீஸ் – போஸ்டர் மீது ஒருடன் மலர்களை தூவி, வெடிவெடித்து ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திருச்சியில் இன்று திரைப்படம் வெளியானது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள 170-வது திரைப்படம் ‘வேட்டையன். இந்த படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

வேட்டையன் திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வேட்டையன் திரைப்படம் இன்று வெளியானது.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஜோடியாகவும், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சியில் இன்று பல்வேறு திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. இதனை முன்னிட்டு திருச்சி மாரிஸ் எல்.ஏ திரையரங்கில் திரைப்படத்தை காண வந்த திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணை தலைவர் சுதர்சன் தலைமையில், மாவட்ட செயலாளர் கலீல் முன்னிலையில், ராயல் ராஜு மற்றும் ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்பட போஸ்டருக்கு ஒரு டன் மலர்களை ஜேசிபி இயந்திரத்தில் வைத்து எடுத்து வந்து தூவினர்.

தொடர்ந்து சரவெடி, அணுகுண்டு போன்ற வெடிகளை வெடித்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்திற்கு வந்து கண்டுகளித்தனர். தற்போது ரஜினி உடல் நலம் குன்றி ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவர் பூரண நலமுடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்