- Advertisement -

சட்டமன்றத் தேர்தலில் எங்கள் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அகில பாரத பார்க்கவ குல சங்கம் அறிவிப்பு

- Advertisement -

சட்டமன்றத் தேர்தலில் எங்கள் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அகில பாரத பார்க்கவ குல சங்கம் அறிவிப்பு

 

நீதிக் கட்சியின் வைர தூண்

சர்ஏடி.பன்னீர் செல்வத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவருடைய மணி மண்டபத்தில்

Vagai

அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bismi

அதிமுகவில்

லீமா ரோஸ்க்கு பதவி வழங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்,நாம் தமிழர் கட்சியில் 9 சட்டமன்ற தொகுதியில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளித்த சீமான்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மந்திரிகள் மற்றும் இரண்டு எம்பிகள் வழங்க வாய்ப்பு அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

எங்கள் சமுதாய மன்னரைப் பற்றி விமர்சனம் செய்து வரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அவருடைய கட்சிக்காரர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் நாங்கள் எதிராக களம் காணுவோம் அல்லது எதிராக வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நிறைய பேர் இருக்கும் பொழுது அவர்களுக்கு அரசியல் கட்சிகள் எம்எல்ஏ எம்பி உள்ளிட்ட பதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று தலைவர்களின் மணிமண்டபம் அருகே டாஸ்மார்க் கடை உள்ளது. அதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களுடைய அமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் ஸ்டாலின் தங்கதுரை வழக்கறிஞர் ரமேஷ், தேவகோட்டை கஸ்பார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்