வைகுண்ட ஏகாதசி திருவிழா – டிச.23 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

0

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் 23.12.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Bismi

தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னொரு பெயர் தருமாதம் என்று அழைக்கப்படும். மார்கழி மாதம் பெருமாளை தரிசனம் செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ராகு கேது பெயர்ச்சி தொழில் வளர்ச்சி நடைபெறும் என்பது ஐதீகம். வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் ( 23.12.2023) சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சியிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்