திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது
திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது

திருச்சி மாவட்டம், ஏர்போர்ட், கபரஸ்தான் தெரு, வள்ளுவர் நகரில் வசித்து வரும் பசிர் அகமது மனைவி ராபியா என்பவர் திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு VIMAN VIHAR-ல் மனை எண்.4ஐ தனது கணவர் பெயரில் வாங்கி அதை சாத்தனூர் பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தனிப்பட்டா வேண்டி திருச்சி கிழக்கு தாலுக்கா அலுவலகத்தில் நிலஅளவை உதவி ஆய்வாளர் தையல்நாயகி என்பவரை கடந்த 10.07.2025ஆம் தேதி ராபியா அவர்கள் சந்தித்தபோது ரூ.13,0000/-ம் கையூட்டு கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 11.07.2025ஆம் தேதி ராபியா திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி, பீட்டர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது திருச்சி, கிழக்கு தாலுக்கா அலுவலக நில அளவை சார் ஆய்வாளர் தையல்நாயகி என்பவர் லஞ்சப்பணம் ரூ.13,000/-த்தை ராபியாவிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி கிழக்கு தாலுக்கா அலுவலகத்தின் நிலஅளவை பிரிவில் விசாரணை நடைபெற்று வருகிறது.





Comments are closed.