நிதிநிறுவனத்துக்குள் புகுந்து, தங்க மோதிரங்கள், செல்போன்களை தூக்கி சென்ற, தந்தை- மகன் கைது!

நிதிநிறுவனத்துக்குள் புகுந்து, தங்க மோதிரங்கள், செல்போன்களை தூக்கி சென்ற, தந்தை- மகன் கைது!

 

Bismi

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ‘குலவணிகர்புரம்’ பகுதியில் வசித்து வருபவர் சரத்குமார்(வயது.32). இவர், அந்த பகுதியில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2024-ஆம் ஆண்டு, இருசக்கர வாகனம் வாங்குவதற்காக, ஆறுமுகசுந்தரம் என்பவர் நிதி உதவி பெற்று, இரு சக்கர வாகனத்தையும் வாங்கி விட்டார். ஆனால், வாகனத்துக்காக வாங்கிய கடன் தொகையில், ஒரு பைசாவை கூட, இதுவரையிலும், ஆறுமுக சுந்தரம் திருப்பி செலுத்தவில்லை. இதன் காரணமாக, இருசக்கர வாகனத்தை நிதிநிறுவன அதிபர் சரத்குமார், பறிமுதல் செய்து, தன்னுடைய அலுவலகத்துக்கு எடுத்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுக சுந்தரத்தின் நண்பரான தச்சநல்லூர் ‘சிதம்பர நகர்’ பகுதியை சேர்ந்த, மணி கண்டன்(வயது.25) மற்றும் அவருடைய தந்தை கணேசன்(வயது.60) ஆகியோர், நிதிநிறுவனமான சரத்குமாரின் அலுவலகத்திற்குள், அத்துமீறி நுழைந்து, அவதூறு வார்த்தைகளை பேசி, அச்சுறுத்தி, 2.5 சவரன் தங்க மோதிரம் மற்றும் 5 செல்போன்கள் ஆகியவற்றை, பறித்து சென்றதாக கொடுத்த புகாரின் பேரில், மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து,மணிகண்டன், கணேசன் ஆகிய இருவரையும் இன்று {ஜனவரி.21} கைது செய்து,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸனா.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்