- Advertisement -

பொள்ளாச்சியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், ‘போதை இல்லா தமிழகம்’ உருவாக்க அண்ணாமலை வெளியிட்ட 6 மாத செயல்திட்டம்!

- Advertisement -

பொள்ளாச்சியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், ‘போதை இல்லா தமிழகம்’ உருவாக்க அண்ணாமலை வெளியிட்ட 6 மாத செயல்திட்டம்!

 

பொள்ளாச்சியில் WTLF (We the Leaders Foundation) சார்பில் நடைபெற்ற ‘போதை இல்லா தமிழகம்’ மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய இலக்குகள் மற்றும் திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Vagai

​அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 

​1. ஜூலை மாதம்: ‘White Band’ மக்கள் இயக்கம்

 

​ஜூலை 2026 முழுவதும் ‘White Band மாதம்’ என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து, போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

 

​இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பு.

 

​இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் “போதை விழிப்புணர்வு மாதம்” ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு; வீடு, தெரு, கிராமம், மற்றும் கல்வி நிலையங்கள் வரை இந்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்படும்.

 

​இந்த இயக்கத்தில் இணைந்துள்ளவர்களில் 17% பேர் பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சான்றாகும்.

 

Bismi

​2. ஆகஸ்ட் மாதம்: 50 லட்சம் மரக்கன்றுகள்

 

​சமூக மாற்றம் என்பது போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆகஸ்ட் மாதத்தை “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்” ஆகக் கடைப்பிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

​3. அக்டோபர் 15: அப்துல் கலாம் பெயரில் புதிய மையம்

 

​வரும் அக்டோபர் 15, 2026 அன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics” தொடங்கப்பட உள்ளது.

 

​இதன் மூலம் நற்பண்புகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அடுத்த ஓராண்டுக்குள் 1.5 லட்சம் தலைவர்களை உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

​”மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம் ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம். மாறுவோம்… மாற்றுவோம்!”

 

– அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்.

 

 

​பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான மற்றும் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

#Annamalai #WeTheLeaders #WTLF #DrugFreeTamilNadu #WhiteBandMovement #GreenTamilNadu #APJKalamCentre #PollachiConference #SocialChangeTN

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்