விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்!
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்!
அரசு மரியாதையுடன் உடலை ஒப்படைத்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN)டாக்டர் ரேவதி பாலன்!

திருநெல்வேலி,நவ.6:-தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள, ரவணசமுத்திரம் ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி க.பார்வதி (வயது.41). இவர் கடந்த 2-ஆம் தேதி மாலையில் வேலை முடிந்து, ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வீட்டருகே ஆட்டோ வந்தபோது, அதிலிருந்து இறங்கினார். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது, பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கீழே விழுந்த பார்வதிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவசர சிகிச்சைக்காக, பார்வதி, கடையம் “தனியார்” மருத்துவ மனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு மூளையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அது பலன் அளிக்காத காரணத்தால், பார்வதி கடந்த 4- ஆம் தேதி, நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசரப்பிரிவில், அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உடலை பரிசோதித்த மருத்துவர்கள், பார்வதியின் உடல்நிலை, மிகவும் மோசமாக உள்ளது! என, தெளிவாக எடுத்துரைத்தனர். மறுநாள் 5-ஆம் தேதி காலையில், மூளை செயல்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிய, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின் முடிவில்,பார்வதியின் மூளை, செயல் இழந்து விட்டதாக, தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பார்வதியின் குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை செய்து, பார்வதியின் உடல் உறுப்புக்களை, திருநெல்வேலி ரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, பார்வதியின் உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல், இரு சிறுநீரகங்கள், விழி வெண்படலம் ஆகியன, இன்று (நவம்பர்.6) காலையில், தானமாக பெறப்பட்டன. பின்னர் பிற்பகல் 2-30 மணியளவில், பார்வதியின் உடல் பூரண “அரசு மரியாதை” யுடன், அவருடைய உறவினர்களிடம், ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN) மற்றும் அரசு மருத்துவமனை தலைவருமான டாக்டர் சி. ரேவதி பாலன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்னாள் தலைவர் (சபாநாயகர்) இரா.ஆவுடையப்பன் மற்றும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.