இயல் இசை நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் 79 ஆவது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது
இயல் இசை நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் 79 ஆவது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் இபி ரோடு பகுதியில் திருச்சிராப்பள்ளி நாடக நடிகர்கள் சங்கம் மற்றும் பன்முக கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து 79 ஆவது சுதந்திர தின விழாவினை கொண்டாடினர்,
இந்நிகழ்ச்சியானது திருச்சிராப்பள்ளி நாடக நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கலைமாமணி முகமது மஸ்தான் அவர்கள் தலைமையில், பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் நிறுவனர் தலைவர் வேல்முருகன், பொருளாளர் பகுருத்தீன் அலி அகமது முன்னிலையில், சிறப்பு விருந்தினராக தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ் ஐ பஷீர் அவர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார் , இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி நாடக நடிகர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள், பன்முகக் கலைஞர்கள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


Comments are closed.