சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகளிடம் ஆசி பெற்ற இளைஞர்கள்! பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நெகிழ்ச்சி!

சமயபுரம்:

திருச்சி மாவட்டம், புகழ்பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு ‘தி ஆர்ட் ஆஃப் லிவிங்’ (The Art of Living) அமைப்பின் நிறுவனரான ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது, லால்குடி பகுதியைச் சேர்ந்த A.S. கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
சுவாமிகளின் ஆசியைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘வீ தி லீடர்ஸ் ஃபவுண்டேஷன்’ (We The Leaders Foundation) அமைப்பின் சார்பாக கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த நற்பணியைப் பாராட்டிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள், “வீ தி லீடர்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் சமூகச் சேவைகள் மிகப்பெரிய வெற்றி பெற எனது மனமார்ந்த ஆசிகள்” என்று வாழ்த்தி வாழ்த்துமடல் பகிர்ந்தார். இளைஞர்களின் இந்த ஆக்கப்பூர்வமான சமூகப் பணியை அங்கு வந்திருந்த பக்தர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.





Comments are closed.