தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு – பொதுச் செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன் பங்கேற்பு!

0

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் O.M பாலா இல்ல காதணி விழாவில், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பி. சந்தன பிரியா பசுபதி பாண்டியன் கலந்து கொண்டார். தொடர்ந்து கருப்பூரில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் உறையூர் கிரீன் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு தலைமை வகித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தலைவர் A.P குட்டி, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சத்யா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் O.M பாலா, மாநில மாணவரணி செயலாளர் பிரவீன், திருவரங்கம் பகுதி செயலாளர் அகில், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் சபரி, திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரூதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Bismi

இதில் திருவரம்பூர் ஒன்றிய இளைஞரணி தலைவராக ரகுநாத், அந்தநல்லூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளராக சதீஷ், திருச்சி தெற்கு மாவட்ட துணை அமைப்பு செயலாளராக சிவசங்கர், திருவெறும்பூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பு செயலாளராக ஜீவா, பாலக்கரை பகுதி இளைஞரணி செயலாளராக மணிகண்டன், பாலக்கரை பகுதி இளைஞரணி அமைப்பாளராக அஜித், திருச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக கொடாப்பு வசந்த், மணிகண்டம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக வேம்பு, மணிகண்டம் ஒன்றிய துணை அமைப்பாளராக மகேந்திரன், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளராக பாலாஜி ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பில் இணைத்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்