- Advertisement -

உறுதியாக அரசியல் கால் புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடந்துள்ளது – திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேட்டி.

- Advertisement -

உறுதியாக அரசியல் கால் புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடந்துள்ளது – திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேட்டி.

 

திருச்சி தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே என் நேரு வீட்டில் காலை 8:00 மணி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். திருச்சி சென்னை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு மற்றும் அவரது சகோதரர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. திருச்சி தில்லை நகரில் நடந்த சோதனை மதியம் மூன்று மணிக்கு l நிறைவடைந்தது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே என் நேரு அளித்த பேட்டியில்..,

Vagai

தமிழ்நாடு வருமானவரித்துறையில் இருந்து 8 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். எங்களிடம் சொன்னது டென்டரில் தவறு நடந்துள்ளது, அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஸ் சோதனை நடத்த வேண்டும் என கூறினார்கள். சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூறினோம். திருச்சி மற்றும் சென்னையில் எனது சகோதரர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. எந்த விதமான ஆதாரங்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டனர். தனது சகோதரர் வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருந்தார், அதை எடுத்துக் கொண்டு விட்டனர். என்னிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டனர்.

என் மீது மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காலை 8 மணியிலிருந்து 3 மணி வரை எங்களிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தோம்.

Bismi

டெண்டர் விஷயமாக நான் எதுவும் தவறாக செய்யவில்லை. அமலாக்கத்துறையில் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக எந்த ஆதாரமும் அவர்கள் கைப்பற்றவில்லை. தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். பழைய வழக்கு குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்ல. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நீதிமன்றம் சென்று நிரபராதி என நிரூபிப்போம்.

அரசாங்கம் காவல்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள், எதிர்கட்சியாக நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என கூறியுள்ளோம்.

அரசியல் நோக்கத்தோடு அச்சுறுத்தல் செய்யலாம் என்ற நோக்கில் இந்த சோதனை நடந்ததாக பார்க்கிறேன்.

சட்டமன்றத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளோம் 110 நாட்களில் நடந்த விஷயங்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசினார் அதற்கு விளக்கம் கொடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.

இது உறுதியாக அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைதான்.

என் வீட்டில் இது மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி எதிர்க்கட்சி சார்ந்தவர்கள் வீட்டில் கால் புணர்ச்சி காரணமாக சோதனை நடப்பது வழக்கம்.

எங்கள் தலைவர் ஸ்டாலின் பேசினார் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்