- Advertisement -

மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரி திருச்சியில் கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Bismi

மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரி திருச்சியில் கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 

​திருச்சி:

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கனிமவள லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஜங்ஷன் பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

Vagai

- Advertisement -

​இப்போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கைலாசம் தலைமை தாங்கினார். இதில் திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

 

​ஆர்ப்பாட்டத்தின் இடையே மாநிலத் தலைவர் கைலாசம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை தொடர்ந்து, மணல் குவாரிகளின் இயக்கம் முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக குவாரிகள் செயல்படாததால், இத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களும், பல லட்சக்கணக்கான ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

 

​நிதி நிறுவனங்களில் கடன் பெற்று லாரி வாங்கியவர்கள், வருமானமின்றி மாதாந்திர தவணையை (EMI) கூட செலுத்த முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அரசு மணல் குவாரிகள் இயங்குவதற்கு இதுவரை எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. எனவே, தமிழக முதலமைச்சர் எங்கள் நிலையை உணர்ந்து உடனடியாக தலையிட வேண்டும். காவிரி, பாலாறு உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான ஆறுகளில் ஆய்வு மேற்கொண்டு, மணல் திட்டுகள் தேங்கியுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, முறைகேடுகளுக்கு இடமின்றி அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

​#TrichyProtest #SandQuarries #LorryOwnersProtest #TamilNaduNews #MiningTrucks #SandMining #TNChiefMinister #LorryDriversIssue

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்