தேவர் ஜெயந்தி, திருச்சியில் நாளை இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

தேவர் ஜெயந்தி: திருச்சியில் நாளை இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
திருச்சி:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அனைத்திந்திய தேவர் பேரவை சார்பில் திருச்சி தில்லை நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய தேவர் பேரவை தலைவர் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி தில்லை நகரில் உள்ள கார்த்திக் வைத்தியசாலாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் எனது தலைமையில் நடைபெறுகிறது.
இம்முகாமில் தலைசிறந்த சித்த மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களைப் பரிசோதித்து, பருவகால மாற்றங்களால் ஏற்படும் சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கான ஆலோசனைகளையும் மருந்துகளையும் இலவசமாக வழங்க உள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் புத்தாடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் சுகாதாரக் குழு தலைவர் டாக்டர் தமிழரசி சுப்பையா மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும் மருத்துவருமான விஜய் கார்த்திக் ஆகியோர் இணைந்து சிறப்பாகச் செய்துள்ளனர்.
எனவே, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச மருத்துவ முகாமில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
#Trichy #ThevarJayanthi #FreeMedicalCamp #SiddhaMedicine #TrichyNews #HealthCamp #ThillaiNagar #TamilNaduNews





Comments are closed.