ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு ‘மனிதநேய மாமணி’ விருது!
ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு ‘மனிதநேய மாமணி’ விருது!
திருச்சியில் நடைபெற்ற ‘சோழன் பார்வை’ இதழின் முதலாம் ஆண்டு விழாவில், ஆதரவற்ற உடல்களைக் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் அவர்களுக்கு ‘மனிதநேய மாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழா பின்னணி:

‘சோழன் பார்வை’ இதழின் முதலாம் ஆண்டு விழா திருச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், இதழின் ஆசிரியர் வேல்முருகன், கௌரவ ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் முதன்மை ஆசிரியர்கள் பகருதீன் அலி அகமது, பாலமுருகன் நாகு ஆகியோர் முன்னிலையில், யோகா ஆசிரியர் பெ.விஜயகுமாரின் தன்னலமற்ற மனிதநேயப் பணியைப் பாராட்டி
‘மனிதநேய மாமணி’ விருது வழங்கப்பட்டது.
”உயிரற்ற உடலுக்கும் மரியாதை அவசியம்” – விருது பெற்ற விஜயகுமார் உருக்கம்:
விருதை ஆன்மேற்றுக்கொண்ட அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் விஜயகுமார் பேசுகையில்:
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழர் பண்பாடு, உயிருடன் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல, உயிர் நீத்தவர்களுக்கும் உரிய மரியாதை அளிப்பதையே உயர்ந்த அறமாகக் கருதுகிறது.
இன்றைய சமூகத்தில் ஆதரவற்றோர், முதியோர், தெருவோர வாசிகள் எனப் பலர் அடையாளமற்று உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு மாலை அணிவிக்கவோ, அழவோ, ஏன் தூக்கக்கூட ஆளில்லாத சூழலில், மனிதநேய உணர்வுடன் இறுதி மரியாதையைச் செய்து வருகிறேன்.”

சேவையின் முக்கிய அம்சங்கள்:
சட்டப்பூர்வ நடைமுறை:
பெயர், விலாசம் தெரியாமல் இறப்பவர்கள் குறித்து, சம்பந்தப்பட்ட சரக காவல் நிலைய காவலர்கள் தரும் தகவலின் அடிப்படையில், அவர்கள் முன்னிலையிலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
பாகுபாடற்ற சேவை:
மதம், சாதி, மொழி, இனம், பாலினம் (குழந்தை, ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்) என எந்தவொரு வேறுபாடும் பாராமல், உரிமை கோரப்படாத உடல்களுக்கு உறவாய் நின்று இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
குடும்பத்தின் ஆதரவு: இந்த நெகிழ்ச்சியான சமூகப் பணிக்கு அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா மற்றும் மகள் கீர்த்தனா ஆகியோர் பெரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
சமூகத்திற்கான செய்தி:
”ஒரு சமூகத்தின் நாகரிகம், அது ஆதரவற்றவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதில்தான் அளவிடப்படுகிறது. வாழ்நாளில் துன்பப்பட்ட ஒருவர், இறந்த பின்னரும் மரியாதையின்றி கிடப்பது வேதனையானது. ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்வது தனிநபர் சேவை மட்டுமல்ல; அது மனித உரிமை, சமூக நீதி மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பாகும்” என்று விஜயகுமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
#TrichyNews #HumanitarianAward #SocialService #AmirthamTrust #HumanityFirst #SocialActivist #Anadhaipenagal #SolanParvai #TrichySocialWorker #RestInPeaceWithDignity





Comments are closed.