திருச்சியில் ஜம்போ சர்க்கஸ் – மொராய்ஸ் சிட்டி மைதானத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி.

திருச்சியில் ஜம்போ சர்க்கஸ் – மொராய்ஸ் சிட்டி மைதானத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி.

இந்தியாவின் மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனமான ஜம்போ சர்க்கஸ் திருச்சியில் தனது பிரம்மாண்ட நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. விமான நிலைய சாலையில் அமைந்துள்ள மொராய்ஸ் சிட்டி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது குறித்து ஜம்போ சர்க்கஸ் மேலாளர் சேது மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில் மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனமான ஜம்போ சர்க்கஸ் காட்சியை திருச்சியில் தொடங்கியுள்ளோம். ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் இரண்டு மணி நேரம் நீடிக்கும். இந்த நிகழ்ச்சியில் 28-க்கும் மேற்பட்ட அதிசயமான சாகச நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மெக்ஸிகன் வீல் ஆஃப் டெத், டார்க் லைன் குளோபில் மூன்று பைக்குகள் ஒரே நேரத்தில் சாகசமாக ஓடும் நிகழ்ச்சி, ரொமான்டிக் சாரி பாலன்சிங், டென்டல் ஏரியல் ஆக்ட், ஆஃப்ரிக்கன் காமிக் சேர், டபுள் ரிங் அக்ரோபாட்டிக் ஆக்ட், அக்ரோபாட்டிக் சேர் பாலன்சிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் பார்வையாளர்களை கவர்கின்றன. ஆஃப்ரிக்கா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி பெற்ற கலைஞர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திறமையான கலைஞர்கள் பங்கேற்கும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைகிறது. இந்த நிகழ்ச்சி தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் நடைபெறுகிறது

Bismi

விலை: ₹150, 200, 250, 350.

மேலும் தகவல்களுக்கு. 9353620520, 6238347006

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்