JCI ROCKTOWN 49 ஆவது பதவி ஏற்பு விழா திருச்சி ஜென்னி பிளாசாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 2024 ஆம் ஆண்டின் மண்டல தலைவர் முனைவர் அன்பு தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதில் JCI யின் கோட்பாடுகள் குறித்தும், JCI ஆல் நாம் எவ்வாறெல்லாம் பயன் பெறலாம் என்பது குறித்தும் விளக்கி பேசினார்.




தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.ஐ ராக் டவுனின் தலைவர் ஜெசி கிரேசியை வாழ்த்தி ஆலோசனைகள் வழங்கினார். அவரை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் JKB எனும் கார்த்திக்பாபு, ஜே.சி.ஐ குறித்தும் அதன் மாண்பு பாரம்பரியம் மற்றும் அதன் உன்னத நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டின் தலைவர் ஜே.சி.வில்லியமை பாராட்டியதோடு, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெஸி கிரேசை வாழ்த்தி, இந்த ஆண்டினை சிறப்பாக நடத்த வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.


முன்னதாக யோசி நிறுவனத்தை சேர்ந்த ஆதி விழாவிற்கு வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து இந்த ஆண்டின் புதிய தலைவரான ஜெஸி கிரேசிக்கு ஜே.சி.ஐ மண்டல தலைவர், மண்டல ஆட்சி மன்ற குழுவினர், விழாவின் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஜே.சி.ஐ ராக் டவுனின் முன்னாள் தலைவர்களான ஜே.சி இரா.பிரசாத், ஜே.சி சிவக்குமார் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 15 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் ஜே.சி.ஐ யின் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் நிறைவாக ஜே.சி சந்தோஷ் குமார் நன்றியுரை கூறினார்.





My co-worker Linnie has one of these. He says it looks wide.
this product is dominant.
I tried to pepper it but got prune all over it.