திருவெறும்பூர் வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிட்டு வாக்கு சேகரித்த ‘ஜல்லிக்கட்டு’ ராஜேஷ்!
திருவெறும்பூர் வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிட்டு வாக்கு சேகரித்த ‘ஜல்லிக்கட்டு’ ராஜேஷ்!

திருச்சி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி கிராமத்தில், ஊர் திருவிழாவை முன்னிட்டு புகழ்பெற்ற நல்ஏறு கட்டும் (ஜல்லிக்கட்டு) நிகழ்ச்சி நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் கலந்துகொண்டு வீரர்களிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.

வாடிவாசலில் மாஸ் என்ட்ரி
வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், தனது அடையாளமான சொந்த ஜல்லிக்கட்டு காளையை வாடிவாசலில் நேரில் அவிழ்த்துவிட்டு வீரர்களோடு களத்தில் நின்றார் ராஜேஷ். “என் உயிரோடு கலந்த ஜல்லிக்கட்டு சொந்தங்கள்” என மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்திய அவர், பாரம்பரிய முறைப்படி காளையை தழுவிய வீரர்களைக் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

முக்கிய வாக்குறுதிகள்
வாக்கு சேகரிப்பின் போது ஜல்லிக்கட்டு ராஜேஷ் முன்வைத்த அதிரடி வாக்குறுதிகள்:
தடையற்ற ஜல்லிக்கட்டு: நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், திருவெறும்பூர் தொகுதியில் எந்தவித தடையுமின்றி, தமிழர்களின் வீர மரபு மாறாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்வேன்.
இலவச பேரிகார்டு (Barricade) வசதி: திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்டு நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கும், விழாக்குழுவினருக்கு சுமையைக் குறைக்கும் வகையில், அரசு அல்லது கட்சி சார்பில் இலவசமாக பேரிகார்டுகள் வழங்கப்படும்.
வீரர்களுக்கு முன்னுரிமை: ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது நம் அடையாளம். அந்த அடையாளத்தைப் பாதுகாக்கும் வீரர்களின் நலன் காக்கப்படும்.
பாரம்பரிய உடையில் காளையுடன் களமிறங்கிய வேட்பாளரின் இந்தச் செயல், அந்தப் பகுதி ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
#Thiruverumbur #NTK #JallikattuRajesh #Jallikattu #TrichyNews #NaamTamilarKatchi #TamilNaduElection2026 #Seeman #SaveTradition #Pazhanganangudi





Comments are closed.