மகப்பேறு பிரசவத்தின் போது தவறான சிகிச்சையால் தான் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதா! மருத்துவர் விளக்கம் திருச்சி

மகப்பேறு பிரசவத்தின் போது தவறான சிகிச்சையால் தான் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதா! மருத்துவர் விளக்கம் திருச்சி

 

மகப்பேறு பிரசவத்தின் போது தவறான சிகிச்சையால் தான் தாய் உயிரிழப்பு என உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் – அறுவை சிகிச்சையின் போது எந்த தவறும் இல்லை முறையாக தான் சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்து வந்துள்ளோம் – பலர் திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து குழந்தை பிறப்பதால் பெண்களுக்கு பல உடல் பிரச்சினை ஏற்படதால்தான் ஒரு சில உயிரிழப்பு ஏற்படுகிறது – ஜெனட் மருத்துவமனை மருத்துவர் விக்டோரியா ஜான்சன் பேட்டி

திருச்சி மாநகர் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஜெனட் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கு பெயர் பெற்ற மருத்துவமனையாகும். ஆகையால் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி, நகர் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும் ஜெயராணி என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது.

ஜெயராணிக்கு 6 வருடங்களாக குழந்தை இல்லாததாலும், அவரது வயிற்றில் கட்டி இருப்பதாலும் திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மகப்பேறு ஜெனட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜெயராணி கர்ப்பம் தரித்துள்ளார்.

மேலும் ஜெயராணி கர்ப்பம் தரித்தாலும், கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாயில் 7 கட்டிகள் இருந்ததால் குழந்தைக்கு பாதிப்பு உள்ள கட்டிகளை மட்டும் அகற்றுவதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி பிரசவத்திற்காக ஜெயராணி அனுமதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாய், சேய் இருவரும் மூன்று நாட்கள் வரை நலமாக இருந்துள்ளனர். கடந்த 7ம் தேதி அன்று ரத்த அணுக்கள் சீராக இருந்துள்ளது. அதன் பின் அடுத்தடுத்த நாட்களில் ரத்த அணுக்கள் குறைந்துள்ளதால் அதற்கு சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் ஜெயராணி நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொண்டார்.

Bismi

இந்த நிலையில் நேற்று ஜெயராணியின் உடல்நிலை மோசமாக இருந்ததாக அவரது கணவர் ஜான்சன் மற்றும் ஜெயராணி சகோதரி மருத்துவரிடம் தெரிவித்தது மட்டுமல்லாமல் சக மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஜெயராணியை சோதனை செய்தபோது ரத்த அணுக்கள் மிகவும் குறைவாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனே மருத்துவமனை நிர்வாகம் உடற்கூறு ஆய்விற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு நேற்று இரவு ஜெயரானின் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று மீண்டும் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஜெனட் மருத்துவமனை முன்பு மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டும் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரிலும், ஜெனட் மருத்துவமனையின் மீது வழக்கு பதிவு செய்ததினால் கலைந்து சென்றனர். பின்னர் அரசு தலைமை மருத்துவமனையில் ஜெயராணியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து அவரது கணவர் ஜான்சன் மற்றும் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஜெயராணியின் கணவர் சகோதரி, உறவினர்கள் கூறும்போது….

ஜெனட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் விக்டோரியா ஜான்சன் அலட்சியப் போக்கில் தான் ஜெயராணி உயிரிழந்தார். அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் மலக்குடலை கிழித்ததால் உயிரிழந்தார் என்றும் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் சேர்த்தபோது அங்கு மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் மேலும் ஜெயராணியின் உயிரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஜெனட் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் விக்டோரியா ஜான்சனிடம் கேட்டபோது…

ஜெயராணியை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு 3ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தாயும், சேயும் மருத்துவர் கண்காணிப்பில் நலமாக இருந்தனர். ஜெயராணி கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாயில் 7 கட்டிகள் இருந்தது குழந்தை பிறப்பதற்கு தீங்கு ஏற்படக்கூடிய மூன்று கட்டிகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்தபோது 3 மருத்துவர்கள் சேர்ந்துதான் செய்தோம். 7ம் தேதி வரை ஜெயராணி நன்றாக இருந்தார். அதன் பின்பு ஜெயராணியின் ரத்த அணுக்கள் குறைந்து காணப்பட்டது ஆனாலும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் வந்தோம், மேலும் உயர் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எங்கள் மருத்துவமனையில் வென்டிலேட்டர் வசதி இருந்தாலும் அனுமதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தோம். நான் 25 ஆண்டு காலமாக மருத்துவராக உள்ளேன். மலக்குடலை தொட்டால் எதுபோன்ற ஆபத்து ஏற்படும் என்று எனக்குத் தெரியும் 25 ஆண்டு காலமாக பிரசவம் பார்த்த எனக்கு தெரியும் மேலும் நானும் ஒரு பெண்தான் என்றும், கடந்த ஜூன் மாதம் துறையூர் ராதிகா என்பவரும், அவரது கணவரும் பொறியியல் முடித்தவர்கள் அவர்களுக்கு நன்றாக தெரியும் பலமுறை குழந்தைக்கு பால் எப்படி கொடுப்பது என்று சொல்லி உள்ளோம் ஆனால் ராதிகா அதிகளவில் பால் கொடுத்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என கண்கலங்கியவாறு தெரிவித்தார், மேலும் சிகிச்சைக்கு வரும் மற்றும் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு நீர் உள்ளிட்ட கட்டிகள் இருந்து வருகிறது ஆனாலும் நாங்கள் சரியான முறையில் தான் சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்கிறோம் என்றும்,

கடந்த சில வருடங்களாக பிரசவத்தின் போது இறப்பு ஏற்படுவது என்ற கேள்விக்கு ….

திருமணமாகி பல வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கும் போது மகப்பேறு பெண்களில் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால் இதுபோன்று உயிரிழப்பு ஏற்படுகிறது என தெரிவித்தார்.

குறிப்பாக திருச்சி புத்தூர் நான்கு ரோடு ஜெனட் மருத்துவமனையில் பிரசவத்தின் போது 10க்கும் மேற்பட்ட குழந்தை அல்லது தாய் இறந்துள்ளதாகவும் பலர் பலர் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்