திருச்சி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையின்கீழ் இக்கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டுப்புறக் கலைக் குழுவினர் மூலம் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருச்சி நகர்ப் பகுதிகள், மண்ணச்சநல்லூர், முசிறி, சமயபுரம் டோல்கேட் மற்றும் மணப்பாறை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் இந்நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்புச் சங்கமும், அந்தந்தப் பகுதி அரசு மருத்துவமனை அலுவலர்களும் இணைந்து சிறப்பாகச் செய்துள்ளனர். இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் வழங்கப்பட்டு வரும் விழிப்புணர்வுச் செய்திகளைப் பெருவாரியான பொதுமக்கள் கண்டு பயன்பெற்று வருகின்றனர்.
#Trichy #AIDSawareness #HIVawareness #TNSACS #TrichyDistrict #PublicAwareness #FolkArts #TamilNaduNews #TrichyNews





Comments are closed.